தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 3 ஆயிரத்து 3 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 379 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 30 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உள்ளது. மேலும், ஆயிரத்து 409 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா - அதிர்ச்சியில் தமிழகம்
- Master Admin
- 04 May 2020
- (693)
தொடர்புடைய செய்திகள்
- 23 November 2020
- (1314)
சாப்பாடு ருசியாக இல்லாததால் பெண் அடித்து...
- 07 May 2021
- (657)
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமர்...
- 25 October 2020
- (588)
இந்தியாவில் செயற்கைக் கோள்களை வெளிநாட்ட...
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்
- 16 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
