பெற்ற மகளை உள்ளாடையால் கழுத்தை இறுக்கி தாய் கொலை செய்ய, தந்தையோ அதை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றுள்ளார்.
இந்த கோர சம்பவம் நடந்தது பிரேசிலில்... Rosiane Nascimento Correia (20) என்ற பெண் மன அழுத்தம் காரணமாக தான் பெற்ற மகளை கொலை செய்துவிட்டதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
பிள்ளையைக் கொன்றுவிட்டு, அதை மறைப்பதற்காக, Correiaவும் அவரது காதலருமான Antonio Carlos Batista Conrado (26)ம், யாராவது தெருவில் நடமாடுகிறார்களா என்று பார்க்கும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.
பின்னர், Antonio, குழந்தையை ஒரு குப்பை போடும் கவரில் வைத்து தெருவில் போட்டுவிட்டு இருவருமாக ஒன்றும் தெரியாதது போல வீட்டுக்குள் செல்வதை CCTV கமெராவில் பதிவாகியுள்ள காட்சியில் காணமுடிகிறது.
மறுநாள், குப்பை பொறுக்க வந்த ஒருவர், குப்பை கவரில் குழந்தையின் உடலைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருப்பதுடன், இந்த பெண் குழந்தை Antonioவுக்கு பிறந்ததில்லை என்பதாலும், இருவரும் தங்களுக்கு அந்த குழந்தை வேண்டாம் என முடிவு செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
தம்பதியும், குழந்தையை மறைக்க அவர்களுக்கு உதவியதாக Correiaவின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.