கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான தற்கொலை உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவர் இறுதியாக வீட்டிற்கு வந்த சந்தர்ப்பத்தில் குறித்த கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதத்தில் அவர், எனது மூன்று பிள்ளைகளுடனும் சந்தோஷமாக இருங்க. காலம் கடந்து செல்லும் போது சோகம் மறந்து போகும். உலகம் உருவாகும், நிலைத்து நிற்கும், காணாமல்போய் விடும் இதுவே உலக நியதி... என்று குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் அவரது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து விஷ போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
52 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
தற்கொலை செய்து கொண்ட உப பொலிஸ் பரிசோதகர் இறுதியாக எழுதிய கடிதம்
- Master Admin
- 03 March 2021
- (4606)

தொடர்புடைய செய்திகள்
- 24 February 2024
- (325)
வீட்டில் துடைப்பத்தை இந்த இடத்தில் மட்டு...
- 25 February 2024
- (323)
எந்த சூழ்நிலையிலும் கெத்து காட்டும் ராசி...
- 24 June 2025
- (110)
இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம்...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.