அமெரிக்காவில் உயிருக்கு போராடிய காதலனை பார்த்து சிரித்தும், அவரிடம் முகம் சுழிக்கும் வகையில் தவறாக நடந்து கொண்டு இருந்ததை தானே வீடியோ எடுத்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விர்ஜினியாவை சேர்ந்த மேகன் அன்னி வல்தல் (32).
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது காதலர் பிராண்டன் உடன் வீட்டில் இருந்தார்.
அப்போது அதிகளவில் ஹெராயின் போதை மருந்துகளை பிராண்டன் சாப்பிட்ட நிலையில் உயிருக்கு போராடியபடி இருந்திருக்கிறார். இதையடுத்து உடனடியாக அவசர உதவிக்கு தகவல் தெரிவிக்காத அன்னி, பிராண்டனை பார்த்து சிரித்தபடி இருந்தார்.
மேலும் அவர் மீது கை வைத்து தவறான செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறார், அந்த சமயத்தில் அன்னியும் போதையில் இருந்திருக்கிறார்.
இதையெல்லாம் தானே வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார்.
பின்னர் ஒருவழியாக அவசர உதவி எண்ணுக்கு போன் செய்த நிலையில் ஊழியர்கள் வந்து பிராண்டனை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களை திரட்டிய பொலிசார் அன்னியை கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் தாமதமாக அவசர உதவிக்கு போன் செய்தது, உயிருக்கு போராடியவரிடம் தவறாக நடந்து கொண்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக அன்னிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.