சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கென் ( Antony Blinken) எதிர்வரும் 18 ஆம் திகதி அலாஸ்காவில் சந்திக்கவுள்ளார்.
பைடன் நிர்வாகம் பொறுப்பேற்றதன் பின்னர் நடைபெறவுள்ள முதலாவது உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையிலான நேரடி கலந்துரையாடலாக இது அமையவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் முதலாவது உத்தியோகபூர்வ வௌிநாட்டுப் பயணமாகிய ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கான விஜயம் நிறைவுபெற்று, அவர் நாடு திரும்பியதன் பின்னர் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.