டெல்லி துவாரகா பகுதியில் வாக்குவாதம் ஒன்றில் பெற்ற தாயை அறைந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த தாயாரின் பெயர் அவதார் கவுர், வயது 76
டெல்லி துவாரகா பகுதியில் வாக்குவாதம் ஒன்றில் பெற்ற தாயை அறைந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த தாயாரின் பெயர் அவதார் கவுர், வயது 76.
கொல்லப்பட்ட அவதார் கவுர் தன் மருமகள், மகனுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போது தாயை முரட்டுத்தனமாக பொட்டில் அறைந்ததில் தாய் கீழே சாய்ந்தார். மயக்கமடைந்த இவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர், ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
திங்கள் மதியம் வாகன நிறுத்தம் தொடர்பாக அண்டை வீட்டாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அப்போது மகன் மற்றும் மருமகளிடம் கவுர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது முரட்டுத்தனமாக பெற்ற தாயை பொட்டில் அடித்ததில் அவர் கீழே சரிந்து மயக்கமடைந்தார், மகன் பார்த்துக் கொண்டிருந்தார்.
கவுரின் கொலைகார மகன் ரன்பீர் (45) மீது போலீசார் ஹோமிசைட் வழக்கு தொடர்ந்துள்ளனர். கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, அங்கு அடிக்கடி வாகன நிறுத்த தகராறு ஏற்பட்டு போலீஸ் வரை புகார் வரும், அப்படித்தான் அன்றும் புகார் வர போலீஸார் வந்த போது பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என்று கூறினார்கள்.
ஆனால் மகன் விடாப்பிடியாக அண்டை வீட்டாருடன் சண்டை இழுத்தான். இதில் தாயார் தலையிட்ட போதுதான் முரட்டுத்தனமாக கோபத்தில் அறைந்துள்ளான் ரன்பீர்.
இது தன் தாயின் மரணத்தில் முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
கண்மண் தெரியாத ஆத்திரத்தினால் மீதி வாழ்க்கையை சிறையில் தான் மகன் ரன்பீர் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். டெல்லியில் மட்டுமல்ல பெருநகரங்களில் இந்த வாகன நிறுத்துமிட சச்சரவுகள், தெருநாய்களை சோறுபோட்டு வளத்து மற்றவர்களை அச்சுறுத்தும் விதமாக நாயை வளர்த்தல் போன்ற அராஜகப் போக்குகளினால் கொலைகள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன.
வளர்ச்சி என்ற பெயரில் நகரங்களில்தான் பிழைக்க வழிவகை இருப்பதாக மாறிவிட்டதால் நகரங்களில் நெரிசல் அதிகமாவதால் இத்தகைய தகராறுகள், அதனால் கொலைகள் இப்போது அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் துவாரகா பகுதியில் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.