இன்று (17) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 286 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.
அவர்களில் 12 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
ஏனைய 274 பேரில் அதிக தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 94 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 59 பேரும் கண்டி மாவட்டத்தில் நால்வரும் மாத்தறை மாவட்டத்தில் ஐவரும் மாத்தளை மாவட்டத்தில் நால்வரும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவரும் பதுளை மாவட்டத்தில் 15 நபர்களும் யாழ். மாவட்டத்தில் ஒருவரும் புத்தளம் மாவட்டத்தில் 17 நபர்களும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 07 நபர்களும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
கொழும்பு – பத்தரமுல்லை பகுதியில் 14 பேருக்கும் வௌ்ளவத்தை பிரதேசத்தில் ஒருவருக்கும் ஹங்வெல்ல பகுதியில் 15 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் கட்டுநாயக்க பகுதியில் 47 பேருக்கும் மினுவாங்கொடை பகுதியில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.