வெளிநாடுகளில் பணியாற்றும் மற்றும் புலம்பெயர்ந்த இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி அளவு முந்தைய ஆண்டை விட கடந்த பெப்ரவரி மாதம் 10 சதவீதம் அதிகரித்து 579.7 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதத்திலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்களின் வருமானம் உயர்ந்துள்ள தொடர்ச்சியான பத்தாவது மாதம் இதுவாகும்.

இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கை 675.3 மில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் பெற்றது.

இது முந்தைய ஆண்டை விட 16.3 சதவீதம் அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், 1255 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 13.2 சதவீதம் அதிகரித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.