தபால் மூலம் இடம்பெற்று வந்த பல்வேறு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் 27ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்த பொதி ஒன்றை பரிசோதனை செய்த போது 27 கிராம் குஷ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அதேபோல், பிரான்ஸில் இருந்து டுபாய் ஊடாக இலங்கை வந்த பொதி ஒன்றை சோதனை செய்த போதும் 4360 போதை குளிசைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு பொதிகளும் போலியான முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பொதிகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன்,புதிய வகை போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்
- Master Admin
- 26 March 2021
- (353)

தொடர்புடைய செய்திகள்
- 07 April 2021
- (599)
இராணுவம் என தெரிவித்து பல இலட்சம் பெறுமத...
- 12 April 2024
- (415)
R என்ற எழுத்தில் உங்க பெயர் தொடங்குதா.....
- 10 June 2025
- (218)
குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள்...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.