மும்பையில் கொரோனா வைரஸ் 2 வது அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பொது இடங்களில் நடமாடும் மக்கள் கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற சட்டவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி மும்பையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்கள் மீதுபொலிஸார் மற்றும் மாநகராட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மட்டும் ரயில் நிலையம், பஸ் நிறுத்தம், வணிக வளாகம், சந்தைகள் உள்பட பல இடங்களில் நடத்திய சோதனையில் முகக்கவசம் இன்றி பொது இடங்களில் நடமாடியதாக 2 லட்சம் பேர் பொலிஸாரிடம் பிடிபட்டு உள்ளனர்.
இவர்களிடம் இருந்து அபராதமாக 4 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக மும்பை பொலிஸ் உதவி கமிஷனர் சைத்தன்யா தெரிவித்து உள்ளார்.
இதில் 50 சதவீதம் மாநகராட்சிக்கும், மீதி தொகை பொலிஸ் நலத்திட்ட பணிகளுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
முககவசம் அணியாதவர்களிடம் 4 கோடி அபராதம் வசூல்!
- Master Admin
- 26 March 2021
- (458)

தொடர்புடைய செய்திகள்
- 29 January 2021
- (378)
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந...
- 12 January 2021
- (399)
கொள்ளையடித்த பணத்தில் உல்லாசம் அனுபவித்த...
- 24 December 2020
- (387)
இன்று 1,035 பேருக்கு புதிதாக கொரோனா- 12...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.