விற்பனைக்காக தற்போது சந்தையில் இருக்கும் தேங்காய் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்ய நுகர்வோர் விவகார ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, மூன்று மாவட்டங்களில் விற்பனைக்குள்ள தேங்காய் எண்ணெய்யின் தரத்தை ஆராயும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களுக்கு சீல் வைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொறுத்தமற்றதென மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளதையடுத்து, அவற்றை மீள் ஏற்றுமதி செய்யும் வரையில் அந்த மூன்று நிறுவனங்களுக்கும் சீல் வைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.