இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயுடன் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்படுவதை தடை செய்யும் புதிய வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன நுகர்வோர் அதிகார சபையை வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளுடன் ஏனைய எண்ணெய் வகைகளை கலப்பதற்கு அனுமதி அளித்து 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் பிரச்சினைக்கு கடந்த அரசாங்க காலத்தில் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவித்தலே காரணம் எனறும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்க வர்த்தமானி அறிவித்தலே காரணம்
