ஓட்டுப்போட வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்த நடிகர் விஜய்யை பிரபல நடிகர் ஒருவர் என்ன தைரியம் இவருக்கு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்.
இதையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார். விஜய் சைக்கிளில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர்.
இந்நிலையில் நடிகர் சாந்தனு, விஜய் சைக்கிளில் வரும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன தைரியம் இவருக்கு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.