மீகஹவத்த, உடபில சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியின் குறுக்காக பயணித்த பெண் லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலத்த காயமடைந்த பெண் உடபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்று மாலை 5.30 மணியளவில் மிரிஸ்வத்த தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி ஒன்று பாலம் ஒன்றில் மோதியதில் முச்சக்கரவண்டி ஓட்டுனரான 62 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவேறு விபத்துக்களில் இருவர் பலி
