கொழும்பு - பதுளை பிரதான வீதி, நுவரெலியா - பதுளை வீதி வாகனப் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாலை வேளையில் இந்த பகுதிகளல் மிகுந்த பனிமூட்டம் காணப்படுவதினால் வாகன போக்குவரத்தின் போது மிகுந்த கவனம் செலுத்துமாறும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய மலையகப் பிரதேசம் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை காரணமாக வீதிகளிலும் ரயில் பாதைகளிலும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, ஹாலிஎல உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் இந்த நிலை காணப்படுகின்றது.
இதேவேளை கொழும்பு - பதுளை பிரதான வீதியில் மரங்கஹவெல, ஹல்தும்முல்ல, தியதலாவ போன்ற பிரதேசங்களிலும் வெலிமட - பதுளை வீதியில் ஹாலிஎல, அம்பவக்க, மொரேதொட்ட பிரதேச வீதிகளிலும் மண்மேடு சரிந்து வீழ்ந்தமை மற்றும் கற்பாறைகள் வீழ்ந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
ஹாலிஎல - அம்பவக்க பிரதேசத்தின் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததனால், வெலிமட - பதுளை வீதியில் நேற்று வாகனப் போக்குவரத்து மூன்று மணிநேரம் தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையக வீதிகளில் பாறைகள், மண்மேடு சரிந்து விழும் சம்பவங்கள் அதிகரிப்பு
- Master Admin
- 16 April 2021
- (524)

தொடர்புடைய செய்திகள்
- 13 May 2025
- (178)
இந்த ராசிக்காரர்கள் முதுகில் குத்துவார்க...
- 26 March 2021
- (361)
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கடத்தப்...
- 21 December 2020
- (404)
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.