இலங்கையில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் பரவல் நிலைமையைக் கட்டுப்படுத்த, தென்கொரிய சுகாதாரத் துறையின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வூரில் ஜானங்க்கும் (Woojing Jeong ) இடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (22) மாலை தென்கொரிய தூதுவரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் கொவிட் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்திற்கு, தென்கொரியாவில் கொவிட் வைரசை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்ற வழிமுறைகள் தொடர்பாக தென் கொரியத் தூதுவர் சுகாதார அமைச்சருக்கு தெளிவு படுத்தியதுடன், இலங்கையில் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் கொரியாவுக்கிடையில் காணப்படுகின்ற நீண்டகால நட்பினூடாக கொரிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்குகின்ற உதவியைப் பெரிதும் பாராட்டுவதாகவும், ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கம் சார்பாகவும் இதற்கான விசேட நன்றியைத் தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
கொவிட் தடுப்பு வேலைத் திட்டத்திற்கு கொரிய அரசாங்கம் உதவி
- Master Admin
- 23 April 2021
- (538)

தொடர்புடைய செய்திகள்
- 01 August 2025
- (75)
கடக ராசிக்கு புது வீடு கனவு நனவாகும் நாள...
- 22 May 2025
- (170)
இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரங்க பெரிய ஆ...
- 08 September 2024
- (203)
திரிகிரஹி யோகம்: 50 ஆண்டுகளுக்கு பின்னர்...
யாழ் ஓசை செய்திகள்
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 01 August 2025
ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ விலை இதோ!
- 01 August 2025
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய நடைமுறை
- 01 August 2025
மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவர்
- 01 August 2025
பிரியாணி ஆசைக்காட்டி விந்தணு தானம் ; ஏமாந்த யாசகர்கள்!
- 01 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
- 01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.