கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சர்ஜா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது, சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேக்னா. கணவர் இறந்த போது அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

இதனிடையே, அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்திருப்பதாக ரசிகர்களும் அவரது உறவினர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், அண்மையில் கூட குழந்தை பிறந்து 6 மாதங்கள் நிறைவுற்றதை விழாவாக கொண்டாடினர். தற்போது மேக்னா அவ்வப்போது சமூகவலைத்தள பக்கத்தில் ஜூனியர் சிரு என செல்லமாக அழைக்கும் தனது குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

அந்த காட்சியில் ஜூனியர் சிரு தனது அப்பாவின் புகைப்படத்தை தொட்டுப் பார்த்து சிரித்து விளையாடுவதை போன்ற வீடியோவை மேக்னா வெளியிட்டுள்ளார். இந்த காட்சியானது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.