பிரபல நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானார் .

கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

இந்த நிலையில் பாண்டு குறித்து பலருக்கும் தெரியாத ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.  

அதாவது, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி கொடியை வடிவமைத்த பெருமை பாண்டுவையே சேரும்.

இதோடு தமிழ்நாடு டூரிஸம் டிபார்ட்மெண்ட் லோகோவும் இவரின் கைவண்ணமே, ஏனெனில் பாண்டு மிகச்சிறந்த ஓவியர் ஆவார்.