தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் உள்ளிட்ட 30 ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தலவாக்கலை லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன இதனை தெரிவித்தார்.
குறித்த தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் 40 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் 30 பேருக்கு கொரோனா!
