தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இன்று (12) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டது.
இம்முறை தேசிய வெசாக் தினத்தை வட மாகாணத்திலுள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த நயினாதீவு ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்தப்பட இருந்தது.
அதன்படி, வரலாற்று சிறப்புமிக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் ஓவியங்கள் இந்த ஆண்டு தேசிய வெசாக் தின நினைவு முத்திரைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா சபுமல்கஸ்கட விகாரை, யாழ்ப்பாணம் கதுறுகொட விகாரை மற்றும் வவுனியா கமடுகந்த தலதா விகாரை ஆகியவற்றை மையமாகக் கொண்டு முத்திரை வடிவமைப்பாளர் பாலிதா குணசிங்க இந்த நினைவு முத்திரைகளை வடிவமைத்துள்ளார்.
10 ரூபாய் , ரூபாய் 15 மற்றும் ரூபாய் 45 ஆகிய மதிப்பிலான மூன்று முத்திரைகள் இதன்போது வெளியிடப்பட்டன.
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள்
- Master Admin
- 12 May 2021
- (507)

தொடர்புடைய செய்திகள்
- 09 January 2021
- (410)
பராக்கிரம சமூத்திர கால்வாயில் பேருந்து க...
- 19 April 2025
- (243)
காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக...
- 10 December 2020
- (329)
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 01 July 2025
வரதட்சணை கொடுமை... புதுமணப்பெண்கள் விபரீத முடிவு
- 01 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.