கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்களை வழங்குவதற்கான ஒரு துரித வேலைத்திட்டம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொவிட் நோயாளர்களுக்கான இந்த கட்டில்களை தயாரிப்பதற்கு நாட்டின் பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் தொழில் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த இளம் பெண்களும் இந்த கட்டில்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அந்த இடத்தை பார்வையிட்டார். இந்த மாவட்டத்தில் நான்கு இடங்களில் கட்டில்கள் தயாரிக்கப்படுவதுடன், கொவிட் நோயாளர்களுக்காக 200 கட்டில்களை தயாரித்து வழங்கவுள்ளனர்.
இதேவேளை, அம்பாறை ஹார்டி உயர்கல்வி நிறுவனத்தில் நடாத்தி வரும் கோவிட் 19 மகளிர் விடுதியின் செயல்பாடுகளையும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
பத்து நாட்களில் 10,000 கட்டில்களை வழங்கும் வேலைத்திட்டம்
- Master Admin
- 17 May 2021
- (645)

தொடர்புடைய செய்திகள்
- 05 December 2020
- (567)
சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக...
- 08 February 2021
- (476)
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்க...
- 28 April 2025
- (164)
இந்த ராசிக்காரர பெண்கள் வாயை திறந்தாலே ப...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.