உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தும் என்று மைக்கே வாகன் தெரிவித்துள்ளார். ஐசிசி-யின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18-ந்தேதி முதல் ஜூன் 22-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் நியூசிலாந்து - இந்தியா பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்குதான் வெற்றி என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறியதாவது:- நியூசிலாந்து வெற்றி பெறும். இங்கிலாந்து கண்டிசன், டியூக் பால், இந்தியா தொடர்ச்சியாக விளையாடியது, அவர்கள் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் இங்கிலாந்து வருவது, அப்படி வந்து நேரடியாக போட்டியில் விளையாடுவது இதெல்லாம் நியூசிலாந்திற்கு சாதகம். நியூசிலாந்து இந்தப் போட்டிக்கு முன் இங்கிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இது இறுதிப் போட்டிக்கு சிறந்த பயிற்சி போட்டியாக இருக்கும். ஆகவே, நியூசிலாந்து அணி சிறப்பாக தயாராகும். பெரும்பாலான வீரர்கள் சிகப்பு பந்தில், குறிப்பாக டியூக் பந்தில் இங்கிலாந்தில் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதெல்லாம் எனக்கு வெளிப்படையாக தெரிந்த விசயங்களில் ஒன்று. எல்லா வழிகளிலும் நியூசிலாந்துக்கு அணிக்குதான் சாதகம். இவ்வாறு மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் நியூசிலாந்து அணிக்குதான்: மைக்கேல் வாகன் சொல்கிறார்
- Master Admin
- 19 May 2021
- (582)

தொடர்புடைய செய்திகள்
- 25 June 2024
- (613)
பிசுபிசுப்பில்லாத மிருதுவான இட்லி வேணுமா...
- 22 March 2021
- (556)
பங்குனி மாதத்தில் ஐஸ்வர்யம் தரும் சிவா -...
- 10 February 2021
- (556)
பெண்களே 40 வயதாகிவிட்டதா? அப்ப இது உங்கள...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
- 11 August 2025
மசாஜ் நிலையத்தில் தகாத தொழில்; 9 அழகிகள் கைது
- 11 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.