இலங்கை போக்குவரத்து சபை எக்காரணம் கொண்டும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள டிப்போக்கள் சிலவற்றுக்கு புதிய பஸ்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை (07) தெரிவித்தார்.
பஸ் விநியோகம் தொடர்பில் அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றமும் இடம்பெற்றது.
போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில், இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, கொடகவெல, பலாங்கொட மற்றும் கலவான ஆகிய டிப்போக்களுக்கான புதிய லங்கம பஸ் விநியோகம் நேற்று இரத்தினபுரி புதிய நகரில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, விநியோகிக்கப்பட்டுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 23 ஆகும்.
இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் முறையை QR முறைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பேருந்திலும் QR முறை - அமைச்சர் அறிவிப்பு!
- Master Admin
- 08 May 2023
- (234)

தொடர்புடைய செய்திகள்
- 19 May 2020
- (637)
யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர்...
- 01 August 2020
- (413)
கறுப்பு உடையணிந்த இராணுவம் இடையூறு: எதற்...
- 26 May 2025
- (154)
முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியன...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 25 July 2025
நாளுக்கு நாள் சரிவடையும் தங்க விலை
- 25 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.