நமது உடலில் ரத்த ஓட்டம் தடைப்படும் பொழுது வலி, தசை பிடிப்பு, மரத்து போதல், செரிமான கோளாறுகள், கைகள் அல்லது கால்கள் குளிர்ந்து போதல் ஆகிய பிரச்சினைகள் வரக்கூடும்.

இதற்கான முக்கிய காரணம் உறுப்புகளுக்கு இயல்பாக செல்ல வேண்டிய ஆக்சிஜன் சரியாக கிடைக்காதது தான்.

இது போன்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை காட்டும். இது போன்ற வியாதிகளை சில மருந்துவில்லைகள் நொடிப்பொழுதில் குணமாக்கி விடுகின்றன.

ஆனால் உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து விடுகின்றது. எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் அதற்கு உணவு சரியான மருந்தாக பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் இது போன்ற நோய்கள் ஏற்பட்டால் என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

கை, கால் அடிக்கடி மரத்து போகுதா?அப்போ இது போன்ற உணவுகள் சாப்பிடுங்க..! | Improve Blood Circulation In Tamil

1. உப்பு நீரில் வாழும் மீன்கள்

ரத்த நாளங்களில் சீராக இயங்குவதற்கு ஒமேகா-3 அமிலங்கள் மிகவும் அவசியம். வஞ்சரம், கானாங்கெளுத்தி, சூரை, நன்னீர் மீன் போன்ற மீன்களில் அதிக அளவு ஒமேகா-3 அமிலங்கள் காணப்படுகிறது. இதனால் மேற்குறிப்பிட்ட நோய்களை தடுக்க வேண்டும் என்றால் இது போன்ற மீன்களை சாப்பிட வேண்டும்.

கை, கால் அடிக்கடி மரத்து போகுதா?அப்போ இது போன்ற உணவுகள் சாப்பிடுங்க..! | Improve Blood Circulation In Tamil

2. சிட்ரஸ் பழங்கள்

உடலுக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குவதில் சிட்ரஸ் பழங்கள் சிறந்தது. ஆகவே ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிடுதல் வேண்டும்.

3. நட்ஸ் வகைகள்

நட்ஸ் வகைகளில் மெக்னீசியம், பொட்டாசியம் ஆர்கினின் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. இதனால் ரத்த ஓட்டத்தை எவ்வித தடைவின்றி சீர்படுகின்றது. இதனால் வால்நட், ஹேசில்நட் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும்.

கை, கால் அடிக்கடி மரத்து போகுதா?அப்போ இது போன்ற உணவுகள் சாப்பிடுங்க..! | Improve Blood Circulation In Tamil

4. வெங்காயம் மற்றும் பூண்டு

உடலின் ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம் பாதுகாப்பதில் பூண்டு முக்கிய இடம் பிடிக்கின்றது. அத்துடன் வெங்காயத்தில் காணப்படும் ஆக்சிடன்ட்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் ஆகிய ஊட்டசத்துக்களும் இரத்தயோட்டத்தை சீர்படுத்துக்கின்றன.     

கை, கால் அடிக்கடி மரத்து போகுதா?அப்போ இது போன்ற உணவுகள் சாப்பிடுங்க..! | Improve Blood Circulation In Tamil