ஒரே சட்டை அணிந்து வந்த விஜய் தேவரகொண்டா, மந்தனாவின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

rashmika-mandanna-vijay-deverakonda

 

இப்படத்திலிருந்து ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள். ஆனால், இவர்களின் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இவர்களுக்குள் காதல் உள்ளதாக சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இருவருமே நாங்கள் நண்பர்கள்தான் என்று தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விமான நிலையத்தில் அணிந்திருந்த சட்டை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, ராஷ்மிகா அணிந்திருந்த சட்டை விஜய் தேவரகொண்டாவின் சட்டையாகும். ராஷ்மிகா அணிந்திருந்த சட்டை விஜய் தேவரகொண்டாவும் அணிந்திருந்தார்.

rashmika-mandanna-vijay-deverakonda

தற்போது, இந்த இரு புகைப்படங்களை ஒன்றோடு இணைத்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.