தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு சேலையில் தங்க தேர் போல் இருக்கும் ஜனனியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இலங்கையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் தொகுப்பாளராக இருந்தவர் தான் ஜனனி.
இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், கலந்து கொண்டார்.
இலங்கையிலிருந்து வந்த லாஸ்லியா போல் அல்லாமல் வித்தியாசமாக இருந்தார். இதன் காரணமாக அதிகமானோரால் கவரப்பட்டார். பிக்பாஸில் அறிமுகமான அன்றே தன்னுடைய எளிமையான அழகால் ரசிகர்கள் மனதை வென்றார்.
நன்றாக விளையாடி வந்த ஜனனி, பின்னர் சில இடங்களில் தேவை இல்லாமல் சில இடங்களில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதால், ரசிகர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற துவங்கினார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி, லியோ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஜனனி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார்.
அந்த வகையில் சிவப்பு நிற சேலை அணிந்து, தங்க நகைகள் போட்டு எடுத்துக் கொண்ட ரீலஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “தங்க தேர் போல் இருக்கீங்க ஜனனி..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.