விமானத்தில் வைத்து மனைவி ஒருவர் கணவரை தாக்கிய நிலையில், உதவிக்கு விமான பணிப்பெண்ணை கணவர் அழைத்தது காணொளியாக வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில் விமானத்தில் பயணிக்கும் கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் கைகலப்பாக மாறி மனைவி தனது கணவரை அடித்துள்ளார்.
உடனே கணவர் விமானத்தில் உள்ள பணிப்பெண்ணை கூச்சலிட்டு அழைத்து, என் மனைவி என்னை படுத்துகிறார்... தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்
இதனை விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் அவதானித்து சிரிக்க ஆரம்பித்துள்ளனர். கணவர் கூச்சலை கேட்ட மனைவி தனது கைகளால் முகத்தை மூடிக் கொண்டுள்ளார்.
கணவரின் இந்த செயலால் மீண்டும் அடிப்பதற்கு கையை நீட்டிவிட்டு பின்பு நிறுத்தியுள்ளார்.