முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லாமல் இருக்கும். இதற்கு நாம் பியூட்டி பார்லர் சென்று விதவிதமான அலங்காரங்களை செய்து கொள்வோம்.
சிலர், முகம் பொழிவு கடைகளில் விதவிதமான கிரீம், பவுடர் போன்றவை வாங்கி பயன்படுத்துவோம்.
ஆனால், இதற்காக நீங்கள் காசும் வீண் செய்யாமல், முகத்தின் அழகை கெடுத்து விடாமல், வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இப்படி தீர்வு காணலாம்.
1) முகம் பளபளப்பாக இருக்க இரவு தூங்கும் முன்பு சிறிதளவு பாலுடன், புதினாச் சாறு கலந்து முகத்தில் பூசி, மறுநாள் காலையில் முகம் கழுவலாம். இதனால், முகம் பளப் பளப்பாகவும், கரும்புள்ளிகள் நீங்கும் பளபளப்பு தோன்றும்.
2) முகம் பளப்பளப்பாக இருக்க தயிர் – அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன், ரோஸ் வாட்டா – 1 டீஸ்புன் மூன்றையும் ஒன்றாக கலந்து ம் மதிய வேளையில் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின் முகத்தை கழுவ முகம் பளப்பளப்பாக இருக்கும்.
3) வெள்ளரிக் காயையும், கேரட்டையும்மிக்ஸியில் போட்டு அரைத்து அதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் கண்ணாடி போல் ஜொலிக்கும். இதனால், முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும். முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.
4) நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பத்து நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.
5)பச்சரிசி மாவு 1 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், அதில் ஒரு டீஸ்புன் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் போட்டு விடுங்கள். இதனால் முகம் பொலிவு பெறுவதுடன் முகதில் உள்ள கரும்புள்ளிகளும் நீங்கும்ம்