பொதுவாகவே நாம் அனைவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுள் ஒன்று குதிக்கால் வெடிப்பு இதனை ஆரம்பத்திலே சரிசெய்வது முக்கியம் இல்லாவிடில் இது பாதங்களை பாரியளவில் சேதப்படுத்தி பார்ப்பதற்கு அவலட்சணமாக மாற்றி விடும்.

நம் உடலின் முழு பாரத்தையும் தாங்குவுது பாதங்கள் தான் அவ்வாறான பாதங்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

குதிக்கால் வெடிப்புக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க ... | Home Treatments For Cracked Heels In Tamilபெரும்பாலும் பாதங்கள் சுத்தாக இல்லாததன் காரணமாகவே குதிக்கால் வெடிப்பு ஏற்படுகின்றது. பாதங்கள் தூய்மையாக இல்லாத போது பாதங்களில் நுண்ணங்கிகள் தங்கிவிடுகின்றன.

இதனால் பாதங்களில் பிளவுகள் உண்டாகி வலி ஏற்படுகிறது. இந்த குதிக்கால் வெடிப்பை நாம் சில இயற்கை முறையினை கையாண்டு வீட்டிலேயே குணப்படுத்த முடியும். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குதிக்கால் வெடிப்புக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க ... | Home Treatments For Cracked Heels In Tamilவேப்பிலை சிறிதளவு மற்றும் கல் உப்பு அரை கப் அத்துடன் 3 தே. கரண்டி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேப்பிலையின் சத்துக்கள் அனைத்தும் நீரில் சேரும் வகையில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

குதிக்கால் வெடிப்புக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க ... | Home Treatments For Cracked Heels In Tamilபின்னர் அந்த தண்ணீரை பாதங்கள் இரண்டும் மூழ்கும் அளவிலான ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் பாதங்கள் தாங்கக் கூடிய அளவில் சற்று குளிர்ந்த நீரை சேர்த்து சமன் செய்து கொண்டு ...

பாதங்களை அந்த தண்ணீரில் 10 தொடக்கம் 20 நிமிடங்கள் நன்கு ஊறவைத்து பின்னர் சுத்தமான பருத்தி துணியால் பாதங்களை நன்றாக துடைத்துக்கொள்ள வேண்டும்.

குதிக்கால் வெடிப்புக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க ... | Home Treatments For Cracked Heels In Tamilபின்னர் தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து பாதங்களில் நன்றாக தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் குதிக்கால் வெடிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்துவர குதிக்கால் வெடிப்பு நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.