பொதுவாகவே டெங்கு ,மலேரியா போன்ற அபாயகரமான நோய்கள் நுளம்புகளின் மூலமாகவே பரவுகின்றன. இவை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் குழந்தைகளை வலுவாக பாதிக்கின்றன.

எனவே, நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். 

நுளம்புகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியலையா? இதை ட்ரை பண்ணி பாருங்க | How To Protect Your Kids From Mosquitoes In Tamilகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன், நல்ல கொசு விரட்டி கிரீம் தடவி வெளியில் அனுப்ப வேண்டும்.இந்த கிரீமை குழந்தைகளுக்கான பைகளிலும் அனுப்பவும். பெரிய பிள்ளைகள இந்த கிரீம் தாங்களாகவே பயன்படுத்தலாம்.

நுளம்புகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியலையா? இதை ட்ரை பண்ணி பாருங்க | How To Protect Your Kids From Mosquitoes In Tamil

முழு ஆடைகள் குழந்தைகளை அரைக்கால் ஆடைகளை அணியச் செய்யாமல், முழுக் கை உடையணிந்து பள்ளிக்கு அனுப்புங்கள். கழுத்து, கை, கால்கள் எங்கு வெளிப்பட்டாலும் கொசு விரட்டி க்ரீமை பயன்படுத்துங்கள்.

முடிந்தளவு  குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே வைத்திருங்கள்.பொதுவாக குழந்தைகள் புல்வெளிகளுக்குச் சென்று விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் மழைக்காலத்தில் புல்வெளிகளில் நுளம்புகள் அதிகமாக இருக்கும். 

நுளம்புகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியலையா? இதை ட்ரை பண்ணி பாருங்க | How To Protect Your Kids From Mosquitoes In Tamil

பள்ளியில் எங்கு விளையாட வேண்டும், எங்கு விளையாடக்கூடாது என்று சொல்லுங்கள். தண்ணீர் தேங்கும் இடங்கள் மற்றும் புல் போன்றவற்றில் இருந்து குழந்தைகளை ஒதுங்கி இருக்குமாறு குறிப்பிடுங்கள். 

குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நுளம்புகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியலையா? இதை ட்ரை பண்ணி பாருங்க | How To Protect Your Kids From Mosquitoes In Tamil

தயிர், மஞ்சள், இஞ்சி, பூண்டு, கீரை, பாதாம், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.