எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் வண்ணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய 3 கலந்த ‘Peach Fuzz’ எனும் நிறம் வண்ணமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

2024-ல் மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் வண்ணம் எது தெரியுமா? | What Color People Will Want Wear The Most In 2024

எனினும், அந்த வண்ணம் பார்ப்பவர்களின் கண்களுக்கு மட்டுமல்ல மனத்துக்கும் இதமளிப்பதாக அமெரிக்காவில் உள்ள Pantone வண்ண நிறுவனம் தெரிவித்துள்ளது.

Peach Fuzz’ வண்ணம் மக்களிடையே நல்ல பண்புகளைத் தூண்டி வலிமை, ஆற்றல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

2024-ல் மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் வண்ணம் எது தெரியுமா? | What Color People Will Want Wear The Most In 2024மேலும், ‘Peach Fuzz’ மென்மையான உணர்வு, அன்பு, ஒருவர் மற்றவரிடம் காட்ட வேண்டிய கனிவு, பகிர்ந்து வாழ்வதன் அர்த்தம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வண்ணமாகவும் இருக்கிறது.

2024 ல் வீட்டுப் பொருள்கள், ஒப்பனைப் பொருள்கள், உடைகள் என மக்கள் அதிகம் தேடி வாங்கும் பொருள்கள் ‘Peach Fuzz’ வண்ணத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2024-ல் மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் வண்ணம் எது தெரியுமா? | What Color People Will Want Wear The Most In 2024

மேலும் தனிமையைப் போக்கி மன அமைதியைக் கொடுக்கக்கூடிய ஆற்றல் ‘Peach Fuzz’ நிறத்துக்கு இருக்கிறது என்றும் அது கூறுகிறது.