பொதுவாக எண் ஒன்றில் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக்கம் கொண்டவர்களாக காணப்படுவார்கள்.
இவர்கள் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருப்பார்கள். இதனால் அநேகமானவர்களால் இலகுவாக இவர்களின் குண இயல்புகளை கண்டு கொள்வார்கள்.
தன்னம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுவார்கள். அத்துடன் அவர்களுக்கு கீழ் இருப்பவர்களிடமிருந்து கடுமையாக வேலை வாங்குவார்கள். இப்படியான விடயங்களில் கடினமாக நடந்து கொள்வதால் இவர்களுக்கு நல்ல குணம் இல்லை என நினைக்கக்கூடாது.
மனித நேயத்துடன் இருக்க வேண்டிய இடங்களில் மனித நேயத்துடன் இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு விடயங்களிலும் கவனமாக இருப்பார்கள்.
அந்த வகையில் எண் 1 பிறந்தவர்கள் இன்னும் என்னென்ன பண்புகளை கொண்டவர்கள் என்பதனை பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
1. எண் ஒன்றில் பிறந்தவர்கள் யாருக்காகவும் அடிமையாக இருக்க மாட்டார்கள். என்ன நேரத்திலும் நேர்மையாக நடப்பார்கள். பொதுவாகத் திருமணம் காலம் கடந்தே நடைபெறும்.
2. காதல் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும் என்றாலும், ஏமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனைவிக்கும் நேரம் ஒதுக்கி, அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
எண் 1 பிறந்தவர்கள் பார்ப்பதற்கு கம்பீரமாக காணப்படுவார்கள். இவர்களின் நெற்றி எடுப்பாக காணப்படும். அத்துடன் வளைந்த புருவம் இருக்கும் மற்ற எண்களை விட இவர்களை இலகுவாக கண்டுபிடித்து விடலாம்.
ஆண்களாக இருந்தால் கம்பீரம் இருப்பது போல் இந்த எண்ணில் பிறந்த பெண்களுக்கும் அதே கம்பீரம் காணப்படும். நீண்ட கூந்தல், கூச்சம் இப்படி பெண்களுக்கு தேவையான பண்புகளும் அவர்களிடம் அதிகம் இருக்கும்.
இப்படியொரு பக்கம் இருந்தாலும் பார்வையில் கோளாறு, அடிக்கடி தலைவலி போன்ற பிரச்சினைகளும் வரக்கூடும்.
அதிர்ஷ்ட நாட்கள்
ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 மற்றும் தேதி மாதம் ஆண்டு கூட்டினால் 1 வரும் தினங்கள் அதிர்ஷ்டமானவை 28ந் தேதி நடுத்தரப் பலன்களே. 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பல நல்ல பலன்கள் தானே வரும். அத்துடன் 2, 7, 11, 16, 20, 25, 29 திகதிகளில் ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது.
1. தங்க மோதிரம், ஆபரணங்கள் அணிவது நல்லது.
2. மாணிக்கம் (RUBY), புட்பராகம் (Topaz), மஞ்சள் புஷ்பராகம் அணிவது மிக்க நலம் தரும்.
3. சிவப்பு ரத்தினத்(Red Opal)தில், சூரிய காந்தக்கல் (Sun Stone) ஆகியவையும் மிக்க நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்
- பொன்னிற உடைகள்
- மஞ்சள், லேசான சிவப்பு நீலம்
கருப்பு மற்றும் பாக்கு நிற உடைகள் அணிவதை தவிர்க்கவும்.