எண் 13 என்று சொன்னாலே பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு எண்ணாக காணப்படுகின்றது. பல நாடுகளில் 13 என்றால் அபசகுணமாகவே பார்க்கப்படுகின்றது. 

13ம் நம்பர் வீடு பேய், ஆவி, கெட்ட சக்தி என்று அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்மறையான பல விஷயங்களுடன் தொடர்புபட்டுள்ளது. 

இப்படி எங்கு பார்த்தாலும் 13ம் இலக்கம் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்கலாம்.

அச்சத்தை ஏற்படுத்தும் எண் 13... காரணம் என்ன? | The Secret Of Number 13 Is Mysteryமேற்கத்திய நாடுகளில் 13ம் இலக்கத்தை அபசகுணமாக பார்ப்பதற்கு காரணம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான இயேசுவின் கடைசி விருந்து மற்றும் இயேசு இறந்த நாள் 13ம் தேதி வெள்ளிக்கிழமை என கூறப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எண் 13 மக்களின் அச்சத்திற்குரிய எண்ணாக காணப்படுகின்றது.

ஏனைய இலக்கங்களில் பிறந்தவர்களை விட 13ம் இலக்கத்தில் பிறந்தவர்கள் வித்தியாசமான குணப்பண்புகளை கொண்டுள்ளனர்.

எண் 13 பற்றிய இந்த பயம் ட்ரிஸ்கைடேகாபோபியா என்று அழைக்கப்படுகிறது.

அதனால் தான் உலகின் பல இடங்களில் குறிப்பாக மேலை நாடுகளில் அறை எண் 13 அல்லது 13வது தளம் காணமுடியாது.

அச்சத்தை ஏற்படுத்தும் எண் 13... காரணம் என்ன? | The Secret Of Number 13 Is Mystery

இது ராகுவின் ஆதிக்கத்தைக் கொண்ட எண்ணாகும். எனவே இந்த எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் தன்மைகளைப் பிரதிபலிப்பார்கள்.

நேரடியாக 13 என்ற எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் பெரிய அளவில் இருக்காது.

இவர்களிடம் பிடிவாதம் அதிகமாக இருக்கும். இந்த எண்ணை ராகுவின் ஆதிக்கம் கொண்ட எண் என்பதால் அதிஷ்டம் இல்லாத எண்ணாக பார்கிறார்கள்.

மேலைத்தேயர்கள் இதை இயேசுவின் இறப்புடன் தொடர்புபட்டதால் அவர்கள் அச்சத்துடன் பார்க்கிறார்கள் .

ஆனால் 13ம் இலக்கத்தின் முழுமையான மர்மம் அறியப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது.