பொதுவாகவே காலநிலையில் மாற்றம் ஏற்படும் போது இருமல் மற்றும் சளி தொடர்பான பிரச்சினைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரைவில் தொற்றிக்கொள்ளும்.
மற்ற நோய்களுடன் ஒப்பிடும் போது இது உடலில் பாரிய பாதக விளைவுகளை ஏற்படுத்ததாத போதும் ஒரு எரிச்சல் உணர்வை கொடுக்கக்கூடிய பிரச்சினையாகும்.
இருமல், சளி பிரச்சினை வந்துவிட்டால் பெரியவர்களே குழந்தைகள் போல் சிரமப்படுவார்கள் என்றால் குழந்தைகளை பற்றி சொல்லவும் வேண்டுமா? இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு பெற சிறந்த வழி தான் மஞ்சள், பனங்கற்கண்டு, மிளகு கலந்த பால்.
மஞ்சள் பால் தயாரி்க்கும் முறை இதனை தயாரிப்பது மிகவும் இலகுவானது பாலை நன்றாக கொதிக்க விட்டு இதில் சிறிதளவு மஞ்சள் மற்றும் மிளகு கலந்து இனிப்புக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கொண்டால் அவ்வளவுதான் மஞ்சள் பால் ரெடி.
பொதுவாகவே மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்த காணப்படுகிறது. நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் இதற்கு அதிகமாக காணப்படுகின்றது. அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது.
எனவே இந்த இரண்டின் கலவை சளி மற்றும் இருமலை வெகு விரைவில் சீர்செய்ய துணைப்புரிகின்றது.