பொதுவாகவே தற்காலத்தில் பலரும் வீட்டில் நாய் வளர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.இவ்வாறு நாயை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் உள்ள ஒரு விடயமாக காணப்படுகின்றது.
ஆனால் நாய் வளர்ப்பதன் நோக்கம் என்னவென கேட்டால் பலரின் பதில் பாதுகாப்புக்காக என்பதாகவே இருக்கும். நாய் வளர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
நாய்கள் வளர்ப்பது இதயத்திற்கு நல்லது 1950 மற்றும் 2019 க்கு ஆண்டுக்கு இடையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், செல்ல பிராணியாக நாய்களை வைத்திருப்பவர்களுக்கு இருதய நோய் வருவற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
நாய் உரிமையாளர்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்திற்கு சிறந்த ஆதரவாக உள்ளதாம்.
எனவே, ஒரு நாயை வைத்திருப்பது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நாய்களால் மனிதர்களின் கடினமான நேரங்களை சமாளிக்க துணைப்புரிய முடியும்.
நெருக்கடியான நேரங்களில் மனரீதியாக நம்மை மீட்கும் சக்தி வளர்ப்பு நாய்களுக்கு உண்டு என கூறப்படுகிறது.