பொதுவாக நாம் பிறக்கும் போதோ, பிறந்து வளருமு் போது நமது உடலில் கூடவே மச்சங்களும் வந்து விடுகின்றது.
இந்த மச்சங்கள் பார்ப்பதற்கு கருப்பு நிறத்திலயோ அல்லது பழுப்பு நிறத்திலயோ தோலின் மீது காணப்படும்.
இந்த மச்சங்கள் அழகை கொடுப்பதோடு நமக்கு ஓர் அடையாளமாகவும் திகழ்கிறது. காரணம் இது மாறாமல் அப்படியே இருப்பது தான்.
அதிலும் ஜோதிட சாஸ்திரத்தின் படி மச்சங்கள் இருக்கும் இடத்தை பொருத்து அதிர்ஷடங்கள் வரும் என்கிறார்கள். பெண்களுக்கு முகத்தில் இருக்கும் மச்சத்தின் பலனை இங்கு தெரிந்து கொள்வோம்.
வலது நெற்றியில் மச்சம் இருப்பவர்களுக்கு வயதான காலத்தில் நிறைய பணம் தேடி வருமாம். மேலும் இவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளதாம்.
இடது நெற்றியில் மச்சம் இருப்பவர்கள் செல்வங்கள் நிறைந்தவர்களாக இருப்பதுடன், ஒரு பைசா கூட மற்றவர்களுக்கு கொடுக்காதர்களாக இருப்பார்களாம்.
புருவங்களில் மச்சம் இருந்தால், செல்வ செழிப்போடு வாழ்வதுடன், திருமணமான பின்பு அதிர்ஷ்டங்கள் தேடிவருவதுடன், 100 வயது வரை ஆரோக்கியமாகவும் வாழ்வார்கள்.
வலதுபக்க கண் இமைகளில் மச்சம் காணப்பட்டால் பிரபலமான மாற வாய்ப்புள்ளதுடன், பணக்காரராகவும் இருப்பார்கள். கீழ் இமைகளில் உட்புறமாக மச்சம் காணப்பட்டால், அதிக செலவாளியாகவும், பணம் வந்தாலும் சேர்த்து வைக்க கஷ்டப்படவும் செய்வார்கள்.
உதட்டின் வெளிப்புறத்தில் மச்சம் இருந்தால் மங்களகரமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அதுவே கீழ் உதட்டின் வெளிப்புறத்தில் காணப்பட்டால் சூதாட்ட எண்ணம் அதிகமாக இருக்கும்.
கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.
மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷ்டம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.
காதுகளில் மச்சம் இருந்தால், ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்கு ஏற்ப பணமும் வரும். சமூதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்குமாம்.