நிறைவடைந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்துக்கு தெரிவான 196உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அதிவிவேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
குறித்த வர்த்ததமானி, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட உறுப்பினர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 196 உறுப்பினர்களையும் 1981 இன் முதலாம் இலக்க நாடாளுமன்ற சட்டத்தின் 62 ஆவது சரத்திற்கு அமைய தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 29உறுப்பினர்கள் தேசிய பட்டியலின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.