நம்மில் பலருக்கும் காலைப்பொழுது விடிவதே Teaயுடன் தான், சுடச்சுட அருந்தினால் தான் அன்றைய நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருக்கும்.

டீ எடுத்துக்கொள்ளும் போது அதில் சர்க்கரைக்கு பதிலாக சிறிதளவு உப்பை சேர்த்து குடித்தது உண்டா?

தாராளமாக உப்பை சேர்க்காமல், சிறிதளவு சேர்த்தாலே போதுமானது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தொடங்கி தோல் பிரச்சனைகள் என பலவற்றிற்கும் நன்மைகளை வழங்குகிறதாம்.

Tea-யில் உப்பு போட்டு குடித்து பாருங்க.. ஏராளமான நன்மைகள் இருக்காம் | Salt With Tea Health Benefitsஇது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

சிறிதளவு உப்பு சேர்ப்பதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு தீர்வாகிறது, தொண்டை வறட்சியால் அவதிப்படும் நபர்கள் ஒருமுறையாவது டீயி்ல் உப்பு போட்டு அருந்தலாம்.

மெட்டபாலிசத்தை அதிகப்படுத்து செரிமானத்தை சீராக்குகிறது, இத்துடன் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உப்பு அவசியம்.

இதுமட்டுமா உப்பில் உள்ள சோடியம் ரத்த அழுத்தத்தை சீர்ப்படுத்துகிறது.

ஹிமாலயன் உப்பு தோல் பிரச்சனைகளுக்கு சிறந்த ஒன்று, சேதமடைந்த செல்களை சரிசெய்வதிலும் முகப்பருக்கள் வராமலும் தடுக்கிறது.

உப்பில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் உங்களுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது, மைக்ரேனால் பாதிக்கப்பட்ட நபர்கள் உப்பு கலந்த டீயை தாராளமாக அருந்தலாம்.

சர்க்கரை இல்லாமல் டீ குடிக்கும் போது கசக்கலாம், உப்பு சேர்க்கும் போது எந்தவித கசப்பும் இல்லாமல் பருகலாம்.