கோடை காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும். அதிலும் சர்க்கரை நோயாளிகள் அதிக சோர்வு மற்றும் சோம்பலுடன் காணப்படுவார்கள்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கோடை காலத்தில் கட்டுக்குள் வைப்பதற்கு நீரிழிவு நோயாளிகள் சில உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் கோடையில் கீரையை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்குமாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு Summer Tips: இந்த உணவை எடுத்துக்கோங்க | Healthy Foods For Diabetes Patient In Summerசர்க்கரை நோயாளிகள் சந்தேகம் இல்லாமல் தர்பூசணியை சாப்பிடலாம். ஏனெனில் இதில் குறைந்த இனிப்பு மட்டுமே உள்ளது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதுடன், நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்கின்றது.

நீரிழிவு நோயாளிகளுக்கு Summer Tips: இந்த உணவை எடுத்துக்கோங்க | Healthy Foods For Diabetes Patient In Summerகோடையில் நீரிழிவு நோயாளிகளுக்கு தக்காளி மிகவும் அருமையான உணவாகும். நீரிழிவு நோயாளிகளின் GI அளவைக் குறைத்து, இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதுடன், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்குமாம்.

அனைத்து வகையான குடைமிளகாயை நீரிழிவு நோயாளிகள் இந்த கோடை காலத்தில் சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து, ஆக்ஸிஜநேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தும், கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கின்றது.

நீரிழிவு நோயாளிகளுக்கு Summer Tips: இந்த உணவை எடுத்துக்கோங்க | Healthy Foods For Diabetes Patient In Summerஇதே போன்று நீரிழிவு நோயாளிகள் பெர்ரி பழத்தினையும் கோடை காலத்தில் எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, சுரைக்காய், வெண்ணெய், கொய்யா, கிரீன் டீ எடுத்துக்கொள்வதும் நல்லது.