எல்லோக்கும் கனவு என்பது வரும் இந்த கனவுகளில் எதிர்காலத்தில் இருக்கும் விஷயங்களின் மறைவான கரு்துக்களை அவை கூறுகின்றன என சொல்வார்கள். எப்படியான கனவுகளுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்களது கனவில் நீங்கள் மரம் விழுந்து விட்டதை போல கண்டால் அது மிகவும் அபசகுணமாகும். இந்த விஷயம் உங்கள் மரணத்தை குறிக்கின்றது.
இது ஏதோ ஒரு வகையில் நீங்கள் மரணப்பிடியில் சிக்கி இருப்பதை குறிக்கும். கனவில் உடைந்த கடவுளின் சிலைகள் தென்பட்டால் அது ஆபத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.
இந்த கனவு எங்கிருந்தோ கெட்ட செய்தி வரப்போவதை உணர்த்துவதாகும். உங்கள் கனவில் நீங்கள் நிர்வாணமான பெண்ணை கண்டால் அதுவும் ஆபத்தின் அறிகுறியாகும்.
இதனால் பெரிய ஆபத்து ஒன்று வரக்கூடும்.இதை தவிர கழுகு, காகம், புறா போன்ற பறவைகள் உங்கள் தலையில் அமர்ந்தால் அது மரணத்திற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
நெருப்பு, எண்ணெய், நெய் அல்லது கண்ணாடியால் ஒரு நபரின் நிழல் மறைந்தாலும் அது மரணத்தின் அறிகுறியாகும். எனவே இதை போன்ற கனவுகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.