நல்ல காற்றோட்டம் உள்ள இடத்திலும் நமக்கு வியர்வை அதிகமாக வந்தால்  இது ஏன் வருகிறது அதற்கு என்ன மாற்று வழி எஎன்பதை இந்த பதிவி்ல் பார்க்கலாம்.

காலநிலை சூடாக இருக்கும் சந்தர்ப்பத்தில் வியர்ப்பது சாதாரண விஷயம் ஆனால் பெண்களுக்கு இரவு நேரத்தில் அதிகமாக வியர்த்தால் அது பல விளைவுகளை ஏற்படுத்தும்.

நன்கு காற்றோட்டம் உள்ள இடத்திலும் வியர்க்குதா? என்ன காரணம் | What Causes Excessive Sweating At Night

இதற்கான அர்த்தம் அவர்கள் மெனோபாஸ் நிலையை எட்டிவிட்டார்கள் என்பதாகும். இதுபோன்ற நேரங்களில் பெண்களுக்கு உடலில் அதிக உஷ்ணம் ஏற்பட்டு வியர்க்கும்.

இதற்கான காரணம் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவதால், இப்படியான அறிகுறி தெரியலாம். தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாவிட்டாலும் காற்றோட்டம் உள்ள இடத்திலும் வியர்க்க தொடங்கும்.

நன்கு காற்றோட்டம் உள்ள இடத்திலும் வியர்க்குதா? என்ன காரணம் | What Causes Excessive Sweating At Nightஇது வழக்கத்திற்கு மாறாகவே உங்கள் உடலில் மாற்றங்கள் ஏற்படுத்தும். அதிகமான தாகம் நிறைய பசி இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும்.

பெரும்பாலும் இந்த வியர்க்கும் பிரச்சனை நீரிழிவு நோயாளியாக இருந்தாலும் வரும். இவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிட்டு சரியான நேரத்திற்கு உறங்குவது சிறந்த பலனை தரும்.

மேலும் இதை தவிர காசநோய், நோயெதிர்ப்பு குறைபாடு, HIV வைரஸ், இதய வால்வு தொற்று, எலும்பு தொற்று இப்படி உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றுகளின் அறிகுறயாகவும் இது இருக்கும்.