திருமணத்திற்கு பின் பெரும்பாலான கணவன் மனைவிகளுக்கிடையில் முரண்பாடுகள் வருவது ஒரு சாதாரண விஷயம் இதில் இருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

திருமண உறவின் உள்ளே வந்ததும் ஒருவருக்கொருவர் அதிகமாக எதிர்பார்க்கிறோம். எதிர்பார்ப்பது தவறான விஷயம் இல்லை. ஆனால் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு எமது துணையை புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த புரிந்துணர்வு இல்லாத காரணத்தினால் தான் எதிர்பார்த்தவை கிடைக்காத போது இருவருக்குள்ளும் முரண்பாடு ஆரம்பமாகும்.

எல்லா திருமண வாழ்க்கையும் பாதியில் முடிவதில்லை கடைசி வரை பலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய தம்பதிகள் உள்ளனர். ஒரு சிலரின் புரிந்துணர்வின்மையால் தான் இவ்வாறான முரண்பாடுகள் வளர்கின்றன.

எமது துணையிடம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பகிர்ந்துகொள்ள வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற கூடாது. யாரிடமும் விட்டுக்கொடுக்கவும் கூடாது.

கணவன், மனைவி உறவில் பிரச்சனையா? வெற்றிகரமாக மீள சில வழிகள் | Some Ways To Get Rid Of Marital Problemsமுடிந்தவரை துணையுடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். தனிமை உணர்வது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்.

நாம் வாழ்க்கை துணையிடம் வெளிப்படையாக பேசும் போது ஒரவரை ஒருவர் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும். பிரச்சனை என்று வரும் சந்தர்ப்பத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து அதை தீர்ப்பதற்கு பழகிக்கொள்ளுதல் முக்கியமானது.

கணவன், மனைவி உறவில் பிரச்சனையா? வெற்றிகரமாக மீள சில வழிகள் | Some Ways To Get Rid Of Marital Problems

இருவரும் ஒன்றாக சேர்ந்து பொருளாதார ரீதியாக எதிர்காலத்தை திட்டமிட வேண்டும். துணையை அதாவது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உங்கள் துணைக்கு பிடித்ததை செய்து மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவும்.

இருவருக்குள்ளும் ஒரு பிரச்சனை வருகிறது என்றால் ஒருவர் மேல் ஒருவர் பழி போடாமல் பிரச்சனைகளை கடந்து வாழ பழகிக் கொள்ளுங்கள்.

கணவன், மனைவி உறவில் பிரச்சனையா? வெற்றிகரமாக மீள சில வழிகள் | Some Ways To Get Rid Of Marital Problemsஇவ்வாறு இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படாது. கடைசி வரை உங்கள் துணையுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும். இவ்வாறு இருந்தால் விவாகரத்து என்பது எந்த தம்பதிக்குள்ளும் வராது என்பது நிபுண ஆலோசகரின் கருத்தாகும்.