'இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்த நிலையில் இந்த படத்தில் நடித்த கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பதும் சித்தார்த் உட்பட ஒரு சிலர் மட்டுமே தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்த விழாவுக்கு வருகை தந்த போது அவருடைய காஸ்ட்யூமை பார்த்து ரசிகர்கள் மற்றும் விழா குழுவினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
பல பிரபலங்களும் பெரிய மனிதர்களும் கலந்து கொள்ளும் ஒரு ஆடியோ விழாவுக்கு இப்படியா ஆடை அணிந்து வருவது என்று அவர் கண் முன்னே சிலர் பேச ஆரம்பித்தனர் என்பதும் ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் கிளாமர் காஸ்டியூமில் அவர் மேடையில் வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலக விழாக்களில் ஏற்கனவே இதே போல் ரகுல் ப்ரீத் சிங் கிளாமராக தான் கலந்து கொண்டுள்ளார் என்றும் அதே பாணியில் தமிழகத்தில் நடக்கும் இந்த விழாவிலும் அவர் இவ்வாறு கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆடியோ லாஞ்சுக்கு இப்படியா வருவது? ரகுல் ப்ரீத் சிங்கை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!
