ஈழத்து பாடகி சாரங்கா மற்றும் சரத் ஆகியோர் இன்றைய நிகழ்ச்சியில் பாடிய பாடல் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.
சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் காதலும் இசையும் சுற்று இடம்பெற்றது.
இதில் மனதை வருடும் மென்மையான பாடல்களை போட்டியாளர்கள் பாடி இசை விருந்து கொடுத்தனர்.
அந்த வகையில் சாரங்கா மற்றும் சரத் ஜோடி, “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே” பாடலை பாடி புல்லரிக்க வைத்திருந்தனர்.
இந்த பாடலை மரியான் படத்திற்காக விஜய் பிரகாஷ் பாடியிருந்த நிலையில், அவரையே சரத் வியக்க வைக்கும் அளவு பாடி இசை விருந்து கொடுத்திருந்தார்.