நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் நடிகைகள் குறிப்பிட்ட சில விஷயங்கள் செய்தால் அவரின் தொல்லை இருக்கவே இருக்காது என பத்திரிகையாளர் ஒருவர் பேசிய பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய் போல் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருப்பவர் தான் நடிகர் பாலகிருஷ்ணா. இவரை அவருடைய ரசிகர்கள் “பாலைய்யா” என அழைக்கப்பார்கள்.
இவர் தந்தையின் வழியில் பயணித்து சினிமாவிற்குள் நுழைந்தவர். முதல் முதலில் தந்தை - என்டிஆர் இயத்தில் வெளியான “தத்தம்மா கலா” என்ற படத்தின் மூலம் கடந்த 1974ஆம் ஆண்டு மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்னர் கடந்த 1983 ஆம் ஆண்டு கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானார். இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணாவிற்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து 100 படங்களுக்கு மேல் கதாநாயகராக நடித்துள்ளார். இவரின் படங்களிலும் சில தோல்வி படங்கள் உள்ளன. ஆனாலும் இவருக்கான ரசிகர்கள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறார்கள்.
இந்த நிலையில் திரைப்படங்களில் கதாநாயகனாக இருந்து நிஜ வாழ்க்கையில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நடிகர் என்றால் அது பாலகிருஷ்ணா தான்.
அந்த வகையில் சமிபத்தில் திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகை அஞ்சலியை மேடையில் தள்ளிவிட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பாரிய எதிர்ப்பை சந்தித்தது.
இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணா பற்றி பாரிய விமர்சனங்கள் எழுந்தன. இதன்படி, பாலகிருஷ்ணா பற்றி சமிபத்தில் ஒரு பேட்டியொன்றில் பேசிய பத்திரிகையாளர் அந்தணன், “ நயன்தாரா- பாலகிருஷ்ணாவுடன் 4 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஆனால் அஞ்சலிக்கு நடந்தது போல் இதுவரையில் அவருக்கு நடக்கவில்லை.
படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னர் பாலகிருஷ்ணாவின் காலில் விழுந்து வணங்கி விட்டால் அவருடைய தொல்லை ஒரு போதும் இருக்காது. அவரை பொறுத்தவரையில் மதிக்க வேண்டும் அவ்வளவு தான். ” என பேசியுள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.