தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் கனகாவை அவ்வளவு எளிதில் ரசிகர்களால் மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரு வெற்றி படமாக அமைந்தது கரகாட்டக்காரன்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் 90-களின் துவக்கத்தில் முன்னணி நாயகியாக முன்னேறினர் கனகா. அதிசய பிறவி,சக்கரை தேவன், சக்திவேல், கோயில் காளை என வரிசையாக தமிழில் வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார்.
தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ள கனகா, ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
திடீரென ஒரு கட்டத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய கனகா, காலப்போக்கில் அப்படியே திரையில் இருந்து காணாமல் போனார். தன்னுடைய வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறார் கனகா.
வெளியாட்கள் பரிட்சயமின்றி வாழ்ந்து வரும் அவரை குறித்து பலரும் பலவகையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அப்படி தான் சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அவர் பேசும் போது, கனகாவின் இந்நிலைக்கு காரணமே அவர் அப்பா அம்மா தான். கனகாவின் அப்பா அவரை கெட்ட வார்த்தைகளிலெல்லாம் திட்டுவார். கனகாவும் பச்சை பச்சையாக பேசுவார். அதே போல, ஷூட்டிங் முடிச்சி எங்கேயும் போக கூடாது என்றெல்லாம் அவரின் அம்மா எக்கச்சக்க கண்டிஷனை போட்டு நெருக்கடி கொடுத்தார்.
அதிக மன அழுத்தத்துக்கு ஆளான கனகா, அதன் சினிமாவில் இருந்து விலக முடித்து எடுத்தார். நடிகரை திருமணம் செய்வதாக கூறி, வீட்டை விட்டும் வெளியேறினார். தனது அப்பா போலவே ஆண்கள் என்றாலே கொடுமையானவர்கள் என்ற பிம்பம் கனகாவிற்கு வந்ததால் யாரையும் கனகா திருமணம் செய்யவில்லை.