பொதுவாகவே அனைவரின் வாழ்விலும் திருமணம் என்பது முக்கியமாக ஒரு அங்கமாக காணப்படுகின்றது. கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என்ற பழமொழி கூட இருக்கின்றது. 

அந்தளவுக்கு திருமணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. திருமணம் சரியாக அமையவில்லை என்றால் அதன் பின்னரான வாழ்க்கையே நரகமாகிவிடும்.சிறந்த வாழ்க்கை துணை அமைவது வரம் என்றே கூட வேண்டும்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் திருமண உறவில் ஏற்படும் சிறிய பிரச்சினைக்கு கூட விவாகரத்து முடிவை எடுத்துவிடுவார்கள். இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

அதிகமாக விவாகரத்து செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Sign Divorces The Mostமேஷ ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மன வலிமையுடனும் தைரியமாகவும் இருப்பார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து அதிக கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். இருப்பினும் திருமண உறவில் பிரச்சினை ஏற்பட்டால் இவர்களின் முதல் தெரிவே விவாகரத்தாகத்தான் இருக்கும். இவர்களை திருமணம் செய்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம். 

மிதுனம்

அதிகமாக விவாகரத்து செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Sign Divorces The Mostமிதுன ராசியில் பிறந்தவர்கள் காந்தம் போல் ஈர்ப்பு கொண்ட பார்வையையும் வசீக தோற்றத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு காதல் விடயத்தில் இயல்பாகவே ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் புதிய அனுபவங்களை பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்ப்பட்டால் உடனடியாக விவாகரத்து செய்யும் முடிவை எடுத்து விடுகின்றனர். 

தனுசு

அதிகமாக விவாகரத்து செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Sign Divorces The Mostதனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் எந்த உறவிலும் நீண்ட நாட்கள் கட்டுப்பட்டு இருப்பதற்கு விரும்ப மாட்டார்கள். பலவிதமான அனுபவங்களை பெற்றுக்கொள்வதில் இவர்களுக்கு இருக்கும் அதீத ஆசை திருமண வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படவும் விவாகரத்துக்கும் காரணமாக அமைகின்றது.