பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், திருமணம் செய்யும் முன்னர் நமது துணையிடம் இந்த 3 கேள்விகளை கேட்காமல் திருமணம் செய்யக்கூடாது என சாணக்கியர் கூறுகிறார். அந்த கேள்விகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. திருமணத்திற்கு தயாராகும் முன்னர் உங்கள் துணையின் உண்மையான வயதை அறிந்து கொள்ள வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாக வயது தெரிந்திருத்தல் வேண்டும். அதே சமயம், கணவன்-மனைவி இடையே வயது வித்தியாசம் இருக்கக்கூடாது எனவும் சாணக்கியர் கூறுகிறார்.

2. உங்கள் துணையின் ஆரோக்கியம் பற்றி விவரங்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். அவர் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். திருமணத்திற்குப் பிறகும் உங்கள் துணை நோய் வாய்ப்பட்டால் அவர்களை பார்த்துக் கொள்வது உங்களின் கடமையாகும். இதனையே சாணக்கியர் இந்த கேள்வியின் மூலம் உணர்த்தியுள்ளார்.

3. வாழ்க்கைத் துணைக்கு கடந்த காலங்களில் ஏதேனும் காதல் உறவுகள் உள்ளதா? என்பதனை அறிந்து கொள்ளவும். கடந்த காலத்தை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க அவர்கள் ஒப்புக்கொண்டால், எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக அவற்றை அறியாமல் திருமணம் செய்து கொள்வது எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

