பொதுவாகவே அனைத்து பெண்களும் தனக்கும் உண்மையாகவும் அக்கறையுடனும் நடந்துக்கொள்ளும் கணவர் கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவியை தாய் போல் நடத்தும் தன்மை கொண்டவர்களாகவும் மிகவும் அக்கறையுடன் ஒவ்வொரு விடயத்தையும் பார்த்து பார்த்து செய்பவர்களாக இருப்பார்கள்.
அப்படி தங்களின் மனைவி மீது அதீத அன்பு மழையைப் பொழியும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியர்களாக இருப்பார்கள்.இவர்கள் இயற்கையிலேயே அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பதால் குடும்பத்ததாரின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். இதுவே திருமணத்தின் பின்னர் துணையை அதிக அக்கறையுடன் கவனித்துக்கொள்வார்கள். இவர்கள் கணவராக கிடைப்பது வரம் என்றே சொல்ல வேண்டும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள் இதனால் துணையுடன் அதிகம் பேச மாட்டார்கள் ஆனாலும், தங்கள் துணையின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் அக்கறை மற்றும் காதலை செயல்கள் மூலம் வெளிப்படுத்துவதையே இவர்கள் அதிகம் விரும்புகின்றார்கள்.
துலாம்
துலா ராசி ஆண்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களால் இவர்களை இலகுவில் புரிந்துக்கொள்ள முடியாது. ஆனால் துணையின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் துணையை மகிழ்விப்பதில் ஆர்வமாக செயற்படுவார்கள்.