காய்கறிகளில் மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் இருக்க கூடிய கத்தரிக்காயை வைத்து எப்படி எண்ணெய் க்தரிக்காய் குழம்பு செ்ய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கத்தரிக்காய் - 1/4 கிலோ,
  • சின்ன வெங்காயம் – 15,
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • தேங்காய் - 2 துண்டுகள்,
  • பூண்டு - 10 பல்
  • கடுகு - 1/4 ஸ்பூன்
  • வெந்தயம் - 1/2 ஸ்பூன்
  • மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
  • தனியா பொடி – 1
  • மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
  • புளி தண்ணீர் - 1 கப்
  • நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
  • கறிவேப்பிலை - 1 கீற்று,
  • கொத்தமல்லி - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

முதலில் நறுக்கியை காம்பு நீக்கி நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பூண்டை தட்டி எடுத்துக்கொ்ளளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தக்காளி, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

கிராமத்து ஸ்டைல் எண்ணெய் கத்தரிக்க்காய் குழம்பு இப்படி செய்யலாமா? | Healthy Food Resipe Oil Aubergine Gravy Tamil

இதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும். இதை மிக்ஸியில் போட்டு அரைத்து மிதுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும். கத்தரிக்காய் சற்று வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும்.பின்னர் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும். 

அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி எடுத்தால் சுவையான கத்தரிக்காய் குழம்பம்.   

கிராமத்து ஸ்டைல் எண்ணெய் கத்தரிக்க்காய் குழம்பு இப்படி செய்யலாமா? | Healthy Food Resipe Oil Aubergine Gravy Tamil